News October 14, 2024

உத்தவ் தாக்கரே ஹாஸ்பிட்டலில் திடீர் அனுமதி!

image

மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ஹாஸ்பிட்டலில் திடீரென அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையின் ICU பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஹாஸ்பிட்டல் முன்பு சிவசேனா (உத்தவ்) கட்சியினர் ஏராளமானோர் கூடியுள்ளனர்.

Similar News

News August 25, 2025

1+ 1= 3..! பிரபல நடிகை கர்ப்பம்!

image

1+ 1 = 3 என குட்டி கால் தடங்கள் இருக்கும் கேக்கை பதிவிட்டு, பிரபல பாலிவுட் பட நடிகை பரினீதி சோப்ரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இவர், 2023-ல் ஆம் ஆத்மி கட்சி MP ராகவ் சத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான பரினீதி, Ishq, Shuddh desi romance, Golmaal again என மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார்.

News August 25, 2025

வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

ஆக.28-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்கு புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

சிறையில் இருந்தே அரசை நடத்த வேண்டுமா? அமித்ஷா

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!