News October 14, 2024
மக்களிடம் 172 மனுக்களை பெற்ற கலெக்டர்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 172 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
Similar News
News August 13, 2025
திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
திண்டுக்கல்லில் தெரு நாய்களால் அச்சம்!

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா். இந்நிலையில், நேற்று(ஆக.12) வழக்கம்போல் பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
News August 13, 2025
திண்டுக்கல்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<