News March 17, 2024
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தம்

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டம், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
அரியலூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
அரியலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் 33 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
அரியலூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


