News March 17, 2024

மதுரை: பயங்கர மோதல் – 8 பேர் மீது வழக்கு

image

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-பிரியா தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தாரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு குடும்பத்தினரும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இது குறித்து இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 8, 2025

மீனாட்சியம்மன் கோயில் விடுதிக்கு தடையின்மை சான்று இல்லை

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் பிர்லா விஸ்ரம் கட்டடத்திற்கு தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று இன்னும் பெறப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலசித்திரை வீதியில் உள்ள இந்த விடுதிக்கு 53 ஆண்டுகளாகியும் இதுவரை தீயணைப்பு- துறையின் தடையின்மை சான்று பெறவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.

News August 8, 2025

மதுரையிலே ரூ.58,100 சம்பளத்தில் வேலை.. 8th போதும்

image

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கும் 8ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. மாத ஊதியமாக ரூ.58,100 வரை வழங்கப்படும். இந்த மாதம் 14ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. தேர்வு செய்யப்படுபவர் மதுரையிலே வேலை வாய்ப்பை பெறலாம்.

News August 8, 2025

மதுரையில் உணவு தங்குமிடதுடன் இலவச பயிற்சி

image

திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக. 18 முதல் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிகல் வயரிங், சர்வீசிங் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!