News March 17, 2024
நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தேர்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7034 மற்றும் 04365 – 252594,252595,252 599 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் அறிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
நாகை: தந்தையை கொலை செய்த மகன் கைது

நாகூர் அடுத்த வெங்கிடங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர். நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்த சேகருக்கும் அவரது மகன் வெங்கடேஷுக்கும் இடையே நேற்று கடும் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனது தந்தை சேகரை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து புகாரின் பேரில் நாகூர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
நாகை: கடத்தலில் ஈடுபட்டவர் கைது

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இசிஆர் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீநாத் (41) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காரில் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News October 14, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகி அக்.16 காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.