News October 14, 2024
எல்லாம் ரெடியா இருக்கா..? முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கிழக்கு பருவமழை அடுத்த சில நாள்களில் தொடங்கவுள்ளது. முன்னதாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறைசார் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Similar News
News August 13, 2025
தமிழகத்தை உலுக்கிய கொலை.. முக்கிய திருப்பம்

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக் கொலையில் முக்கிய திருப்பமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் தந்தை சரவணன், சகோதரர் சுர்ஜித் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 13, 2025
கூகுள் குரோமுக்கு ₹2.88 லட்சம் கோடி விலை

₹2.88 லட்சம் கோடி கொடுத்து கூகுள் குரோமை வாங்க Perplexity AI முன்வந்துள்ளது. ஆன்லைன் Browsing-ல் Monoply செய்ததாக எழுந்த புகாரில், குரோம் பிரவுசரை விற்க அமெரிக்க கோர்ட் உத்தரவிட்ட நிலையில், Perplexity AI இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஆஃபரை ஏற்காமல், கூகுள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோர் குரோமை பயன்படுத்துகின்றனர்.
News August 13, 2025
தவெகவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர்..

சுதந்திர தினத்தன்று கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடியரசு தினத்தன்று தேநீர் விருந்துக்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, விஜய் புறக்கணித்தார். இம்முறை செல்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.