News October 14, 2024
சிவகங்கை கலெக்டரின் முக்கிய அறிவிப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறியதாவது;சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் புகாா் தெரிவிக்கவும், வழக்குப் பதிவு செய்யவும், உதவி தொடா்பான முறையீடுகளை உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18002021989 அல்லது 14566-இல் அரசு விடுமுறை நாள் தவிா்த்து, அலுவலக வேலை நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
Similar News
News November 20, 2024
சிவகங்கையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
பெண்ணை வன்புணர்வு செய்த 5 பேருக்கு குண்டாஸ்
மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19.09.2024 அன்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த விளாக்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், வில்வகுமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தரப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் நேற்று (நவ.19) உத்தரவிட்டார்.
News November 20, 2024
கறவை மாட்டுப் பண்ணையம் – சுய வேலை வாய்ப்பு பயிற்சி
கறவை மாட்டு பண்ணையம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வகுப்பறை பயிற்சியுடன் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 6374543121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சரவணன் ஜெயம் தெரிவித்துள்ளார்.