News March 17, 2024
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

நெல்லை மாவட்டத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.
Similar News
News April 4, 2025
திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 4, 2025
நெல்லையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி, கணக்காளர், விற்பனை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படங்கள் உள்ளது. இதில் இளங்கலை பட்டம் பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.30 க்குள் இங்கே <
News April 4, 2025
நாங்குநேரி பெயர் காரணம் தெரியுமா ?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒர் பழமையான ஊராகும். இங்குள்ள பெரிய குளத்தில் நடுவே வானமாமலை பெருமாள் தோன்றியதாக ஐதீகம். பெருமாளுக்கு நாங்கன், நாராயணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஏரியில் நாங்கன் உதித்த இடம் என்பதால் இவ்வூர் நாங்கனேரி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி நாங்குநேரி என ஆனது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நாங்குநேரி ஊருக்கு சென்று பழமையான நாங்கனை தரிசித்து வாருங்கள்.