News March 17, 2024
புதிய சாதனைப் படைத்தார் இந்திய தடகள வீரர்

கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் 27.41.81 நிமிடங்களில் இலக்கை அடைந்து 2ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் 2008ஆம் ஆண்டு பதிவான இந்தியாவின் சுரேந்திர சிங் (28:02.89) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 41 வினாடிகள் தாமதமானதால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.
Similar News
News April 11, 2025
இது ஏ இடம்.. இங்கா நான்தா கிங்.. கே.எல்.ராகுல் அதிரடி

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்களை விளாசிய டெல்லி அணி எளிதாக வெற்றி பெற கே.எல். ராகுல் உதவினார். மற்ற வீரர்கள் ரன்களை சேர்க்க கஷ்டப்பட்டபோது, ராகுல் மட்டும் RCB-யின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார். போட்டிக்கு பின் பேசிய அவர் பெங்களூரு மைதானத்தை பற்றி என்னைவிட அதிகமாக தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். ராகுல் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
News April 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: துறவறவியல்
அதிகாரம்: வெகுளாமை.
குறள் எண்: 303
குறள்: மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். பொருள்: யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
News April 11, 2025
கேத்ரின் தெரசாவின் கிளாமர் பாடல்.. அப்டேட்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலும் சுந்தர் சியும் இணைந்துள்ள படம் கேங்கர்ஸ். இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் “குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே” என்ற வரிகளுடன் இடம்பெற்றுள்ளது. வரிகள், கேத்ரின் தெரசாவின் கிளாமர் லுக்கை பார்த்தால் இது குத்துப்பாடல் என்றே தெரிகிறது.