News March 17, 2024
ரூ.1,397 கோடி நன்கொடை பெற்ற திரிணாமுல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2வது அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதற்கடுத்து, காங்கிரஸ் கட்சி 3வது அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,334 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 4ஆவது அதிகபட்சமாக சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,332 கோடி பெற்றுள்ளது. பிஜேடி ரூ.944 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442 கோடியும், டிடிபி ரூ.181 கோடியும் பெற்றுள்ளன.
Similar News
News November 1, 2025
தென் தமிழகத்தில் மோசமான தோல்வியை EPS சந்திப்பார்: TTV

EPS-ன் பதவி வெறியால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை விட மூத்த நிர்வாகி ஒருவரும் கிடையாது எனவும், 2021-ஐ விட 2026 தேர்தலில், தென் தமிழகத்தில் மிக மோசமான தோல்வியை EPS சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், EPS-ஐ பதவியில் அமர வைத்த நாங்கள் துரோகியா, அவர் துரோகியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 1, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000 கிடைக்குமா? வந்தது அப்டேட்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த உணவு பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்த தகவல் வெறும் வதந்தியே எனத் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
News November 1, 2025
WC ஃபைனல்: இன்னும் தொடங்காத டிக்கெட் விற்பனை

மகளிர் ODI உலகக்கோப்பை ஃபைனல் நாளை நடைபெற உள்ள நிலையில், BookMyShow-ல் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்காதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோசமான திட்டமிடல் என BCCI-ஐ குறிப்பிட்டு ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மோத உள்ளன. முன்னதாக, கடந்த 2023 ஆண்கள் ODI உலகக்கோப்பையின் போதும், கடைசி நிமிடத்தில் தான் டிக்கெட் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


