News October 14, 2024
காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை

இன்று காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
மதியம் 12 மணி வரை.. முக்கியச் செய்திகள்

*CM <<17400700>>ஸ்டாலின்<<>> தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.
*நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது: <<17399560>>அரசியல்<<>> கட்சிகள் கண்டனம்.
*ஹிமாச்சலில் மீண்டும் <<17387462>>மேகவெடிப்பால்<<>> பெருவெள்ளம்.
*பாக்.,கின் பயங்கரவாத எதிர்ப்பு பாராட்டுக்குரியது: USA.
*மாறாத <<17399590>>தங்கம்<<>> விலை. *உலகம் முழுவதும் வெளியானது ‘<<17398550>>கூலி<<>>’. *3 வீரர்களை கொடுக்க <<17400416>>CSK<<>> மறுப்பு.
News August 14, 2025
கன்னட நடிகர் தர்ஷனை கைது செய்ய உத்தரவு

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்(SC) உத்தரவிட்டுள்ளது. ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த SC சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமினை ரத்து செய்ததோடு, உடனடியாக தர்ஷனை கைது செய்ய ஆணையிட்டுள்ளது.
News August 14, 2025
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

CM ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் DCM உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.