News March 17, 2024
புதுவை: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று(மார்ச்.17) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் அரசியல் தொடர்பான பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற அரசியல் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் – தமிழகம் எல்லை சோதனை சாவடிகளில் பறக்கும்படை மற்றும் போலீசார் சோதனை பணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
புதுச்சேரியில் மது கடைகள் மூட உத்தரவு!

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News September 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரியாத நபர்களிடமிருந்தோ RTO E Challan என்கின்ற போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு லிங்க் ஒன்று அனைவருக்கும் பகிரப்படுகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று உங்களது தகவல்களை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும். ஆதலால் யாரும் இத்தகைய RTO E Challan என்ற லிங்க் ஐ தொட வேண்டாம்.
News September 3, 2025
புதுவையில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

புதுவை, வருவாய் & பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் & பல் நோக்கு உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி புதுவை, காரைக்கால், மாகி & ஏனாம் பகுதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் & தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.