News March 17, 2024
கோடை விடுமுறைக்கு எங்கே போறீங்க?
தேர்வுகள் முடிந்து விரைவில் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. இந்த நாட்களில் பலரும் சுற்றுலா செல்ல விரும்புவது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குதான். அதில், பரம்பிகுளம், டாப்ஸ்லிப் பகுதிகளுக்கு இதுவரைக்கும் போகாதவங்க நிச்சயம் முயற்சி பண்ணிப் பாருங்க. கேரள வனத்துறையைச் சேர்ந்த பரம்பிகுளம் புலிகள் காப்பகத்துல ட்ரெக்கிங், சஃபாரி போன்ற சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
Similar News
News November 20, 2024
யாராலும் எங்களை சேர்க்க முடியாது: ரஹ்மான் தம்பதி
ஏஆர் ரஹ்மான்-சாயிரா பானு தம்பதியர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சில சிரமங்களும் பதற்றங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் இணைக்க யாராலும் பாலமாக செயல்பட முடியாது. மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2024
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால்….
காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் ஏதேனும் நன்மைகள் உண்டா? என்று கேள்வி இருக்கலாம். அப்படி செய்வதன் மூலம், உடலில் கிளைகோஜன் அளவு குறையும் என்கிறார்கள். இதனால், கொழுப்பு வேகமாக கரைந்து, குளுக்கோஸை உறியப்பட்டு, வகை 2 நீரிழிவு நோயைக் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது ஒரு முறையே தனி நபர் உடலை சார்ந்த விஷயம் உடற்பயிற்சி. அதற்கு முன்னர், உடலுக்கு உட்டச்சத்து என்பது முக்கியமான ஒன்று.
News November 20, 2024
மகளிர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய அணி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் ஜப்பான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. முதல் அரையிறுதியில் மலேசிய அணியை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா புதன் கிழமை மோதவுள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி சீன அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.