News October 13, 2024
கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அக்-19 அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. கல்வித் தகுதி 8வது முதல் பட்டப் படிப்பு வரை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
–
Similar News
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் இறந்த பின்னும் வாழும் சிறுவன்!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த பாரத கோவிலை சேர்ந்தவர்கள் தேவேந்திரன், இவரது மனைவி ஜமுனா. இவர்களின் மகன் கோவில்கனி (8). உடல் நலக்குறைவால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரின் கண்களை தானமாக அளிக்க பெற்றோர் முன்வந்தனர். இவரது கண்கள் பெறப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
கிருஷ்ணகிரியில் புதிய தொழில் பயிற்சி நிறுவனத் தொடக்கம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 35 மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் நேற்று (ஆகஸ்ட் 25) வழங்கினாா்.
News August 26, 2025
இன்று கிருஷ்ணகிரி வரும் பிரேமலதா விஜயகாந்த்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரிக்கு இன்று (26/08/2025) வருகை தர உள்ளார். சேலம் பைபாஸ் அருகே ஆவின் மேம்பாலம் அருகே மாலை 6:00 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். கட்சிப் பணிகள் பல்வேறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.