News March 17, 2024
கோவை முழுவதும் நடவடிக்கை!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த பெருந்தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டது. மேலும் பல்வேறு மேம்பாலங்களில் வரையப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை கோவை முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
Similar News
News April 7, 2025
கோவை மாவட்ட அங்கன்வாடியில் வேலை

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
News April 6, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.6) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News April 6, 2025
கோவை பரளிக்காடு சுற்றுலா!

கோவையில் காரமடையை அடுத்து பில்லூர் அணையை ஒட்டியுள்ள கிராமம் பரளிக்காடு. இங்கு வனத்துறையால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு அடர்ந்த காட்டுக்குள், பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து, ஆற்றுக் குளியலை குடும்பத்துடன் அனுபவிக்க முடியும். இணைய வழியாக மட்டுமே இதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.