News October 13, 2024

சேலம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் (இரவு 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய (ஆரஞ்சு அலார்ட்) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 26, 2025

சேலம்: இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரத்தில் 26.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; J.ஜெய்சல்குமார் (94981-78821) , P.குமார் (94981-74170), R.பால்ராஜ் (94436-21083), D.காந்திமதி (94981-75610), ஆகியோர் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

News August 26, 2025

சேலம் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு!

image

சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை வீதிகளை முறையாக பரிசீலனை செய்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பயன்படுத்தப்படுவது அத்தியாவசியம் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் சாலையில் பயணிக்க வேண்டுமெனவும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

News August 26, 2025

இலவச போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 38 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தாட்கோ மூலம் இலவசமாக தங்குமிடம் உணவுடன் போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!