News October 13, 2024
திருவாரூர் மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த மூன்று நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் மூன்று நாட்களில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 102 நபர்களை கைது செய்தும், குடி போதையில் வாகனம் ஓட்டிய 80 நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
திருவாரூர்: சிறப்பு கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் செப்.17 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில், மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ஆதார் மற்றும் பான் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர்
News September 14, 2025
திருவாரூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (32). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் ஊர்நல அலுவலர் கலைவாணி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அருள்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
மன்னார்குடியில் சாலை மறியல் அறிவிப்பு

மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், எள், பருத்தி, உளுந்து, போன்றவற்றிற்கு காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து செப்.16-ந் தேதி மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எம்.பி வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.