News March 17, 2024

தஞ்சாவூர் ஆட்சியர் ஆலோசனை

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (17.03.2024) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Similar News

News April 7, 2025

தஞ்சை: மானியத்தில் பண்ணை அமைக்க ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் nlm.udyamimitra.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 7, 2025

தஞ்சையில் வேலை வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 7, 2025

தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!