News March 17, 2024
தேர்தல் பத்திரம் மூலம் ரூ.8,250 கோடி நன்கொடை பெற்ற பாஜக

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,250 கோடி நன்கொடை பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத்திடம் இருந்து பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரை ரூ.2,190 கோடியும், 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை ரூ.6,060 கோடியும் நன்கொடை பெற்றதாகவும், இது தேர்தல் பத்திர நிதியில் 50% என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
பதில் சொல்லுங்க முதல்வரே பதில் சொல்லுங்க: நயினார்

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்து, குற்றங்களைப் பெருகவிட்டு, பின் குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன் என்று நயினார் சாடியுள்ளார். இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா, மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முடியுமா அல்லது இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா, பதில் கூறுங்கள் முதல்வரே என கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 4, 2025
இப்படி பண்ணா உங்க போனும் வெடிக்கலாம்.. உஷாரா இருங்க!

ரோட்டில், ஆபீஸில் என பல நேரங்களில், திடீரென போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜில் போட்டு வைப்பதுதான் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சார்ஜாகும் போது, பேட்டரி அதிகமாக சூடாகி விடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, போன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள். SHARE IT
News November 4, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

தங்கம் விலை 22 கேரட் கிராமுக்கு ₹100, சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,250-க்கும், சவரன் ₹90,000-க்கும் விற்பனையாகிறது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்த தங்கம்<<18192239>> சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீண்டும் மளமளவென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


