News October 13, 2024
நாகையில் 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்
நாகையில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருந்து கொத்தள ரோட்டில் உள்ள ஒரு கடையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையிலும் 13.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Similar News
News November 20, 2024
நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE IT
News November 19, 2024
நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை
சென்னை முகாம் அலுவலகத்தில், இன்று நவம்பர் 19, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹுசைன் சாஹிப் இடம் வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் நாகூர் தர்கா நிர்வாக உறுப்பினர்கள் இருந்தனர்.
News November 19, 2024
இ – சேவை மையங்களில் சான்று கட்டணம் நிர்ணயம்
இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.