News October 13, 2024
முளைகட்டிய வெந்தயம் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள்களில் வெந்தயமும் ஒன்று. வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் வைட்டமின் C, பொட்டாசியம், இரும்பு, புரதம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன. குறிப்பாக, இது முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. இதயக்கோளாறுகள், மாதவிலக்கு பிரச்னை, மூலநோய், நீர்க்கடுப்பு, நரம்புத்தளர்ச்சி பாதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.
Similar News
News August 13, 2025
முதுகு, கழுத்துக்கு வலு சேர்க்கும் பிட்டிலாசனம்!

✦செரிமானத்தை தூண்டி, மார்பு மற்றும் தோள்பட்டைகளை விரிவடையச் செய்கிறது.
✦தரையில் முழங்காலிட்டு கைகளை தோள்பட்டைக்கு நேராக தரையில் வைக்கவும்.
➥மூச்சை உள்ளே இழுத்து, முதுகை வளைத்து, மார்பை முன்னோக்கி நீட்டி, தலையை உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥மூச்சை வெளியே விடும்போது, முதுகை வில் போல வளைத்து, தலையை குனிந்து, வயிற்றை உள்ளிழுக்கவும்.
News August 13, 2025
விஜயகாந்த் Photoவை விஜய் பயன்படுத்தலாம்.. பிரேமலதா

தேமுதிகவை தவிர யாரும் விஜயகாந்த் Photo-வை பயன்படுத்தக்கூடாது; கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மானசீக குரு விஜயகாந்த் என தெரிவித்தால், போட்டோவை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா நேரடியாக அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் மனம் மாற்றத்திற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது.
News August 13, 2025
மேடையில் பேசுவோமா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

அதிமுக – திமுக சாதனைகள் குறித்து மேடை போட்டு பேசுவோமோ என CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால் விடுத்துள்ளார். பர்கூரில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என ஏழைகளுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக கூறினார். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.