News March 17, 2024
இறைச்சி கடைகளில் ஆய்வு

திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சியில் செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளை கூத்தாநல்லூர் நகர்மன்ற துணை தலைவர் எம்.சுதர்சன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பை கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு சுகாதார முறையில் அன்றாடம் வரும் மீன் இறைச்சிகளை நல்ல முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Similar News
News October 24, 2025
திருவாரூரில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்வி வங்கிக் கடன் முகாம் வரும் அக்டோபர் 29-ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News October 24, 2025
திருவாரூர்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு “Get unlimited internet offer send the 5 digit code to the no. 95xxxxxxxx.” இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் ஒடிபி எண்ணை பகிர வேண்டாம் மோசடி பேர்வழிகள் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து பண மோசடி செய்யலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
News October 24, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


