News March 17, 2024
பள்ளி மாணவி கொடூரமாக கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் 11ஆம் வகுப்பு மாணவி காதலித்து வந்ததால், அவரை பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவி கடந்த 3 நாள்களுக்கு முன் காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதலை கைவிட மறுத்ததால், மாணவியை ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
Similar News
News August 12, 2025
Swiggy/Zomatoல் இனி வீடு தேடி வரும் மது!

கேரளாவில் மதுபானங்களை Swiggy/Zomato மூலம் வீட்டுக்கு டெலிவரி Door delivery செய்யும் திட்டத்திற்கு மாநில அரசிடம் உரிமை கேட்டுள்ளது Kerala State Beverages நிர்வாகம். தற்போது இத்திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்டர் செய்ய கண்டிப்பாக 23 வயதை கடந்தவராக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
News August 12, 2025
மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்கிய EC

தேர்தலில் போட்டியிடாத பதிவுசெய்யப்பட்ட 476 கட்சிகளை தேர்தல் ஆணையம்(EC) நீக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 121 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 44 கட்சிகள் இதில் அடக்கம். நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா, சண்டிகரில் தலா ஒரு அரசியல் கட்சி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 334 கட்சிகளை EC நீக்கியது கவனிக்கத்தக்கது.
News August 12, 2025
பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் சுமார் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 17 பள்ளிகளும், சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, மதுரை, ஈரோட்டில் 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கோவை, திருப்பூர், விருதுநகர், தி.மலை, குமரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.