News March 17, 2024
புதுச்சேரியில் துணை ராணுவ படையினர் குவிப்பு

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேர்தல் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் புதுச்சேரி போலீசாருடன் புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவ படையினருடன் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
புதுச்சேரி மின்துறை வலியுறுத்தல்

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை, சாரம் பாலாஜி நகர், வெஙகட்டா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்கவும்.” இவ்வாறாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
News January 21, 2026
புதுவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுவை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (21-01-2026) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவ்வை நகரின் ஒரு பகுதி, ராஜாஜி நகர், அசோக் நகரின் ஒரு பகுதி மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று புதுச்சேரி மின்வாரியம் அறிவித்துள்ளது.
News January 20, 2026
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்!

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.


