News October 12, 2024
WARNING: சர்க்கரை நோய்க்கு இதுவே காரணம்

இந்தியர்களிடையே சர்க்கரை நோய் (நீரிழிவு) அதிகரிக்க காரணம், cakes, chips, cookies, crackers, fried foods, mayonnaise, margarine மற்றும் ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் என்று ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் நிறைந்திருக்கும் glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மக்களே உஷார்!
Similar News
News August 12, 2025
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 12, 2025
என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.
News August 12, 2025
BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.