News March 17, 2024

வேளச்சேரியில் 120 நாய்கள் மாநகராட்சி மீட்பு

image

வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி  அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

Similar News

News October 23, 2025

சென்னையில் வட மாநில இளைஞர்கள் நூதன மோசடி!

image

சென்னை: ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் செய்து தருவதாக கூறி நூதன மோசடி செய்த இளைஞர்கள் கைதாகியுள்ளனர். வட மாநில நபர்களிடம் UPI பாஸ்வேர்ட் பெற்று பல லட்சம் மோசடி செய்த பீகாரை சேர்ந்த 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்களிடம் இருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News October 23, 2025

சென்னை: கடற்கரையில் பரவும் வெண் நுரைகள்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும், ஆகாய தாமரையும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகின்றன. இதனால் மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடற்கரையோரம் படர்ந்துள்ளது.

News October 23, 2025

சென்னை: கனமழை களப்பணியில் 22 ஆயிரம் பேர்

image

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு(1913) மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு, பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!