News March 17, 2024

திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று(மார்ச்.17) காலை அய்யனூர் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் மண் குவியலை கொட்டி பாதையை ஆக்கிரமித்ததாக கூறி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

திருப்பத்தூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

திருப்பத்தூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 3, 2025

திருப்பத்தூர்: 30 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், வேலூரில் இருந்து 50 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் நாளை நவம்பர் 4 மாலை முதல் இயக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!