News October 11, 2024

141 பயணிகளை காப்பாற்றிய விமானிக்கு குவியும் பாராட்டு

image

திருச்சியில் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 141 உயிர்களை காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோவுக்கு அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பயணிகளும் அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News August 18, 2025

திருச்சிக்கு பக்கத்துல நம்பமுடியாத இடங்கள்?

image

திருச்சியில் மலைக்கோட்டை, கல்லணை ,ஸ்ரீ ரங்கம் கோயில் போன்ற இடங்களை தவிர நமக்கு தெரியாத பல இடங்கள் திருச்சியை சுற்றி இருக்குனு தெரியுமா?
✅முக்கொம்பு அணை,
✅பட்டாம்பூச்சி பூங்கா,
✅திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்,
✅அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்,
✅பச்சமலை மலைகள்,
✅புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,
நம்ம திருச்சிக்கு பக்கத்துல இப்படி பல இடங்கள் இருக்குனு தெரியாத நபர்களுக்கும் SHARE செய்து ஒரு Visit பண்ணுங்க!

News August 18, 2025

திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.

News August 17, 2025

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆக.15ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(20) என்பவர் சுற்றித்திரிந்தார், அப்போது அரை மீட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள காப்பகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.17) லட்சுமணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், லட்சுமணனை ஒப்படைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!