News October 11, 2024
கனமழை தொடர் நீர்வரத்தால் அணைகள் ஃபுல்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு –பழனி அருகே உள்ள பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 75 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் பெய்த மழையின் அளவு 50 மிமீ ஆக பதிவாகி உள்ளது.
Similar News
News August 12, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மெஷின் வேண்டுமா ? FREE

திண்டுக்கல் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை<
News August 12, 2025
பேருந்து மோதி விபத்து – வாலிபர் பலி!

வடமதுரையை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளபொம்மன் பட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 12, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.2,000 பெறக்கூடிய SUPER திட்டம்!

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு <