News March 17, 2024

மூதாட்டி கொலை ஒருவர் கைது

image

அரியலூர் செந்துறை அடுத்த இலங்கைச்சேரியை சேர்ந்த பவளக்கொடி என்பவர் கடந்த வியாழக்கிழமை(மார்ச்.14) அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மருத்துவ செலவிற்கு அடமானம் வைக்க அவரது நகையை கேட்டதாகவும், தர மறுத்த பவளக்கொடியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

அரியலூர்: 21 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், KMS 2025−26-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை, கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, விளந்தை, காடுவெட்டி, கங்கைகொண்ட சோழபுரம், சோழமாதேவி, இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி உள்ளிட்ட 21 கிராமங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கபட உள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

அரியலூர்: ATM-வில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!