News October 11, 2024

பிரதமரின் கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. https://scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்படலாம் என ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டார்.

Similar News

News October 3, 2025

தென்காசி: தடுப்பு சுவரில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

image

தென்காசி மாவட்டம், குருவிகுளம் பகுதியில் உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரன்(33) மதுபோதையில் பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து தவறி கீழ விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 3, 2025

தென்காசியில் யூடியூபர் கைது

image

ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் தீபன் இவர் youtube மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் ஆண்களுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் பெண் சிசுக்கொலை குறித்து வீடியோ வெளியிட்டதால் அவர் தென்காசி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார்

News October 3, 2025

ஆலங்குளம்: துப்பாக்கிகள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வனச்சரக எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – தாமாக முன்வந்து ஒப்படைப்பார்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை ரகசியம் காக்கப்படும் என தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!