News March 17, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

வேலைவாய்ப்பற்ற தி.மலை இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

News April 6, 2025

கார் ஓட்டுனருக்கு கத்தி குத்து

image

திருவண்ணாமலை சாரோன் பகுதியில் சீனு என்பவர் கார் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தனிப்படை அமைத்து கொலை செய்தவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!