News March 17, 2024
விழுப்புரம்: மர்மமான முறையில் இறந்த தையல் கலைஞர்

விழுப்புரம் மாவட்டம் வீராமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (57), தையல் கலைஞர். இவர் சிறுவந்தாடு அடுத்துள்ள மோட்சகுளம் பகுதியில் உள்ள அக்னி குளம் அருகே கரும்பு தோட்டத்தில் கை, தலை, காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் நேற்று (மார் 16) இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 12, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் செ.குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலந்துள்ளதால் 30க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குன்னத்தூர் கிராம மக்கள் இன்று(ஆக.12) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
News August 12, 2025
விழுப்புரத்தின் இந்த அதிசயம் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் குடைவரைக் கோயிலின் வரலாறு தெரியுமா? குடைவரைக் கோயில் என்பது பெரும் பாறையை குடைந்து சென்று அதில் அமைக்கப்படும் கோயில் ஆகும். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் இரண்டும் வேறுபட்டு காட்சியளிக்கும். ஒரு முறையேனும் இங்கு சென்று பார்க்கவேண்டும் என உங்கள் நண்பருக்கு இதை ஷேர் செய்து அழைத்து செல்லுங்கள்
News August 12, 2025
அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எல்ஏ ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா இன்று (ஆக.12) அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை RMO.Dr.ரவிக்குமார், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.