News October 11, 2024

தேனியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தேனி மாவட்ட திறன் பயிற்சித் துறை சாா்பில் வருகிற அக்.14 தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநர் களை தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து தோ்ச்சி பெற்றவா்களும், தோ்ச்சி பெறாதவர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News July 7, 2025

தேனி: சொந்த ஊரில் அரசு வேலை (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனிக்கு 25 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974475>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

தேனி:சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

image

தேனி மாவட்டத்தில் 25 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அனுகலாம்.

News July 7, 2025

நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

தேனி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 10 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுள்ள 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். மொத்த தொகை ரூ.2,18,000. அதில் 50% மானியமாக அரசு ரூ. 1,09,000 வழங்கும். மீதி தொகையை பயனாளி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை அணுகலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.

error: Content is protected !!