News October 11, 2024
சளித் தொல்லையை விரட்டி அடிக்கும் தூதுவளை தேநீர்

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
Similar News
News August 12, 2025
கஞ்சாவை மத்திய அரசே தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சுவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசை சாடினால் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழக அரசு மீது ராமதாஸ் குறைகூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News August 12, 2025
உங்களின் தலையெழுத்தை மாற்றும் ஒற்றை சொல்..

தொடர் தோல்விகளால் தவித்து போயிருப்பவர் நீங்கள் என்றால், இந்த ஒரு வார்த்தை உங்களின் தலையெழுத்தையே மாற்றும். எந்த ஒரு சூழலிலும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தை மட்டும் மனதில் ஆழமாக நிறுத்துங்கள். அதே போல, சுத்தமான கரும்பலகையில்தான் எதையும் எழுதமுடியும். ஆகவே மனதிலுள்ள குப்பைகளை நீக்குங்கள், அதாவது எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். SHARE IT.
News August 12, 2025
உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.