News March 17, 2024
திருமங்கலம் அருகே விபத்து

திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி (65). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கண்டுகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 23, 2025
மதுரை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 23, 2025
மதுரை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

மதுரை மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க
News October 23, 2025
மதுரை அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருப்பட்டி பிரிவு அருகே கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார் 28, சந்தேகத்திற்கிடமான வகையில் காருடன் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்துகின்றனர்.