News October 11, 2024

கார் மோதி விபத்து – ஒருவர் பலி

image

திருச்சி ஈபி ரோடு பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதி ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

Similar News

News August 18, 2025

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொது மக்களின் நலன்கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் Say NoTo DRUGS & TOBACCO புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் உதவி எண் 8939146100 அழைக்க கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW

News August 18, 2025

திருச்சிக்கு பக்கத்துல நம்பமுடியாத இடங்கள்?

image

திருச்சியில் மலைக்கோட்டை, கல்லணை ,ஸ்ரீ ரங்கம் கோயில் போன்ற இடங்களை தவிர நமக்கு தெரியாத பல இடங்கள் திருச்சியை சுற்றி இருக்குனு தெரியுமா?
✅முக்கொம்பு அணை,
✅பட்டாம்பூச்சி பூங்கா,
✅திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்,
✅அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்,
✅பச்சமலை மலைகள்,
✅புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,
நம்ம திருச்சிக்கு பக்கத்துல இப்படி பல இடங்கள் இருக்குனு தெரியாத நபர்களுக்கும் SHARE செய்து ஒரு Visit பண்ணுங்க!

News August 18, 2025

திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.

error: Content is protected !!