News October 11, 2024
உதயம் திரையரங்கம் தொடர்ந்து இயங்கும்

சென்னை அசோக் நகரிலுள்ள உதயம் திரையரங்கம், நஷ்டத்தில் இயங்கி வருவதால் விரைவில் மூடப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் தான் அந்தத் திரையரங்கில் ஓடும் கடைசிப் படமென செய்தி வெளியானது. இதுகுறித்து உதயம் திரையரங்கம் தரப்பில், “திரையரங்கம் விரைவில் மூடப்படுவது உறுதிதான். ஆனால் ‘வேட்டையன்’ கடைசிப் படமல்ல. இன்னும் சில படங்கள் இங்கு ஓடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News September 14, 2025
சென்னையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி

கண்ணகி நகர் மயானம் அருகில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவர் நந்தகோபால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்ணகி நகரில் வசித்து வந்த இவர், நேற்று மாலை குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கினார். நீச்சல் தெரியாததே உயிரிழப்புக்குக் காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கண்ணகி நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் இன்று (செப்டம்பர் 14) காலை 6 மணி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கும், டீசல் ₹92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News September 14, 2025
சென்னை: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <