News March 17, 2024
கையும் களவுமாக பிடிபட்டது பாஜக

தேர்தல் பத்திர மோசடி தொடர்பாக பாஜக கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அழுத்தம் கொடுத்து பாஜக தேர்தல் பத்திர நிதி பெற்றதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், கட்சிக்கு பெற்ற நிதியை திமுக எப்போதும் தணிக்கைக்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜக அரசு நிறுவனங்களை பயமுறுத்தி அமலாக்கத்துறை மூலம் பல நூறு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News October 26, 2025
4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
News October 26, 2025
EPS துரோகம் செய்பவர் என்பது விஜய்க்கு தெரியாதா? TTV

சொந்த கட்சிக்காரர்களுக்கே துரோகம் செய்த EPS, தனக்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா, அவர் என்ன சிறு பிள்ளையா என்று டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை; நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
News October 26, 2025
வங்கிக்கடன்.. வந்தது HAPPY NEWS

தங்க நகைகளை போலவே, இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெற RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 kg வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெறலாம். ₹1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு ₹85 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


