News October 10, 2024

மதுரை ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

image

தென்னக ரயில்வே மதுரை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூரிலிருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Similar News

News December 9, 2025

மதுரை: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண் பலி

image

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சுமதி(54). நேற்று இவருக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்று, தண்ணீர் என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்துள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திலகர் திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

News December 8, 2025

மதுரை: விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி

image

மதுரை, பரவையைச் சேர்ந்த கார்த்திக்(36) மற்றும் அவரது மனைவி சங்கீதா(21) இருவரும் சேர்ந்து டூவீலரில் மேலூர் – அழகர்கோவில் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அ.வல்லாளப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்து இருந்த சங்கீதா தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!