News October 10, 2024

வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு!

image

பார்சி வழக்கப்படி, இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்கள். மனிதன் இயற்கையின் பரிசு என்றும், அதை திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் நம்பினர். இதனால் பண்டைய காலத்தில் ஊர் எல்லையில், DAKHMA என மண் கோபுரம் அமைத்து, உடலை வைத்துவிடுவர். இயற்கையாய் சிதைந்து போகும் வகையிலும், பறவைகளுக்கும் உடல் உணவாகிவிடும். ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப, அந்த வழக்கம் தற்போது இல்லை. டாடாவின் உடல் எரியூட்டப்பட்டது.

Similar News

News December 31, 2025

ரூ.1 லட்சம் பரிசு: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜன.20 ஆம் தேதி ஆகும். இதில், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இதற்கு <>tnpcp.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க!

News December 31, 2025

புத்தாண்டு முதலே சமத்துவம் பொங்கட்டும்: CM

image

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026 அமையும் என்று CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயக போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் ஆண்டாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புத்தாண்டு தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 31, 2025

டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

image

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

error: Content is protected !!