News October 10, 2024
இறக்குமதி சேவைகளுக்கு GST வரி விலக்கு அமல்!

வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள கிளைகளுக்கு, அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு GST செலுத்துவதில் அளிக்கப்பட்ட விலக்கு அமலுக்கு வந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் 54ஆவது GST கவுன்சில் கூட்டம் செப்.12ஆம் தேதி நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த சிறப்பு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 12, 2025
BREAKING: தங்கம் விலை ₹640 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை, 2-வது நாளாக இன்றும் தாறுமாறாக குறைந்து ₹74 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 குறைந்து ₹74,360-க்கும், கிராமுக்கு ₹80 குறைந்து ₹9,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 12, 2025
சீனாவுக்கு மீண்டும் 90 நாட்கள் அவகாசம் கொடுத்த டிரம்ப்

சீனாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மேலும் 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தக போரால் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145% வரியை விதித்திருந்தது. பதிலுக்கு சீனாவும் வரியை உயர்ந்த, உலக நாடுகளுக்கு பாதிப்பு சந்தித்தன. இதையடுத்து இரு நாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்த நிலையில் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
Swiggy/Zomatoல் இனி வீடு தேடி வரும் மது!

கேரளாவில் மதுபானங்களை Swiggy/Zomato மூலம் வீட்டுக்கு டெலிவரி Door delivery செய்யும் திட்டத்திற்கு மாநில அரசிடம் உரிமை கேட்டுள்ளது Kerala State Beverages நிர்வாகம். தற்போது இத்திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்டர் செய்ய கண்டிப்பாக 23 வயதை கடந்தவராக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?