News March 17, 2024
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டி

ஆந்திர சட்டசபை தேர்தலில், நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் களம் இறங்குகிறார். நகரி தொகுதியில் ரோஜா 3வது முறையாக போட்டியிடுகிறார்.
Similar News
News September 3, 2025
BREAKING: கூட்டணியில் இல்லை.. பரபரப்பு அறிவிப்பு

NDA-வில் இருந்து விலகுவதாக அமமுகவின் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். துரோகம் தலைவிரித்து ஆடுவதாக குற்றஞ்சாட்டிய அவர், கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். OPS-ஐ தொடர்ந்து, டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News September 3, 2025
டெல்லிக்கு செல்லாதது ஏன்? அண்ணாமலை பதில்

அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்ற காரணத்தை அண்ணாமலை விளக்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். இதில் அண்ணாமலை பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதாக வாக்கு கொடுத்துவிட்டதால் டெல்லிக்கு செல்லமுடியவில்லை என்றார்.
News September 3, 2025
Parenting: குழந்தைக்கு இத சொல்லிக் கொடுத்தீங்களா?

உங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. 2-3 வயது குழந்தைகள் இந்த அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.➤மூச்சு பயிற்சிகளை வழங்குங்கள் ➤அவர்களாகவே உடைகளை அணியட்டும் ➤அவர்களுக்கு ஊட்ட வேண்டாம். அவர்களே சாப்பிடட்டும் ➤அவர்கள் போட்ட குப்பையை அவர்களையே சுத்தம் செய்ய சொல்லுங்கள் ➤மன்னிப்பு கேட்கவும், நன்றி சொல்லவும் கற்றுக்கொடுங்கள். SHARE.