News March 17, 2024
ஓட்டல் தோசையில் கிடந்த கரப்பான்பூச்சிகள்

டெல்லியில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் கிடந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் தோசை வாங்கியபோது, அதில் குட்டி குட்டியாக 8 கரப்பான்பூச்சிகள் கிடந்துள்ளன. இதை வீடியோவாக அவர் செல்போனில் பதிவு செய்ததை கண்ட ஊழியர்கள், தோசையை எடுத்து சென்றுவிட்டனர். வீடியோவை இணையதளத்தில் பெண் வெளியிட்டதுடன், காவல்துறையிலும் புகார் அளிக்கவே, விசாரணை நடக்கிறது.
Similar News
News October 20, 2025
சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் இதுதான்

சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகம் செயலிழந்தால் சருமத்தில் வறட்சி, தொடர்ச்சியான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
News October 20, 2025
41 மரணங்களுக்கு விஜய்யே காரணம்: திமுக

விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 அப்பாவிகள் உயிரிழந்ததற்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கரூர் மரணங்களுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கரூருக்கு தாமதமாக சென்றதற்கான காரணத்தை சொல்லும் வரை திமுக விடப்போவதில்லை என ஏற்கெனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 20, 2025
தங்கம் போல் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டி

தனது வெட்க புன்னகையால் இளசுகளின் இதயங்களை வென்றவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள கீர்த்தி, தமிழிலும் LIK, வா வாத்தியார், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தங்க நிறத்தில் சேலை அணிந்து பூவுலகின் தேவதை போல் ஜொலிக்கும் போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பார்த்தவுடன் ஆளை மயக்கும் கீர்த்தியின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.