News October 10, 2024

இந்தியா தனது மகனை இழந்துவிட்டது: ARR

image

சில மனிதர்கள் வாழும் புத்தகங்கள் என வழிகாட்டியும், உத்வேகமுமாக விளங்கிய, ரத்தன் டாடா மறைவுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்தியா ஒரு உண்மையான மகனையும், சாம்பியனையும் இழந்துவிட்டது. தலைமைத்துவம், வெற்றி, மரபை நமக்கு கற்றுக்கொடுத்தவர். எளிதில் அணுகக்கூடிய மிக அற்புதமான மனிதர்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரத்தன் டாடாவை உங்களுக்கு பிடிக்குமா?

Similar News

News August 12, 2025

துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

image

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 12, 2025

விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!