News March 17, 2024

சிஏஏ குறித்து தெளிவான நிலைப்பாடு இல்லை

image

சிஏஏ சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் முதலில் இடதுசாரிகள் பக்கம் நின்றதாக கூறிய அவர், பின்னர் நிலைப்பாட்டை மாற்றி பாஜகவுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார். மேலும் கேரளாவை சேர்ந்த 18 காங்., எம்.பிக்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் சாடினார்.

Similar News

News October 26, 2025

மீண்டும் அமெரிக்க அதிபர் ரேஸில் கமலா ஹாரிஸ்

image

கமலா ஹாரிஸ் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபராக இருப்பார் என தெரிவித்த அவர், அது தானாக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 2028 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் தான் பின்தங்கியிருப்பதாகக் கூறும் கருத்துக் கணிப்புகளை பற்றி கவலையில்லை எனவும் குறிப்பிடுள்ளார்.

News October 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 500 ▶குறள்: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.▶பொருள்:வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

News October 26, 2025

RO-KO மேஜிக் அன்றும்.. இன்றும்.. என்றும்

image

இந்தியாவுக்கு வெற்றிகளை தேடித் தருவதில் தங்களை விட கில்லாடிகள் யாருமில்லை என ரோஹித்-கோலி காம்போ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இருவரும் ODI-ல் 19 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப், 12 முறை 150+ மேல் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். RO-KO-வின் அன்றும்.. இன்றும்.. என்றும்.. மேஜிக் தருணங்களை SWIPE செய்து பார்க்கவும்.

error: Content is protected !!