News October 10, 2024

சிறிய ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

விருதுநகர் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு.!

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் நிலையில் மதிப்பூதியமாக ரூபாய் 560 வழங்கப்படுகிறது.

News December 12, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டில் பிரச்னையா… இங்க போங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று பயனடையலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!