News March 17, 2024
1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
விழுப்புரத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா

தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆட்சி மொழிச் சட்டவார விழா வரும் 17.12.2025 வரை 26.12.2025 விழுப்புரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விழாவில் ஆர்வமுள்ள மாணவர்கள், மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News December 15, 2025
விழுப்புரம்: மடிக்கணினி திட்டம் – ஆட்சியர் ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (15.12.2025) நடைபெற்றது. இதில், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில் வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.
News December 15, 2025
விழுப்புரம்: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி, வங்கி மேலாளர் நாசர் உட்பட பலர் உள்ளனர்.


