News March 17, 2024
ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
Similar News
News January 8, 2026
புதுவை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியத்தில் சேர விரும்பும் மாணவர்கள் (NTA) நடத்தும் CUET-PG 2026 தேர்விற்கு வருகிற 14/01/2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் வருகிற கல்வியாண்டில் (2026-2027) இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு (66%) குறைக்கப்படும் எனப் புதுவைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
News January 8, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 8, 2026
புதுச்சேரி ஜிப்மருக்கு தேசிய அளவில் விருது

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும் 2024–2025 ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ விருது திட்டத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதற்காக ஜிப்மருக்கு ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்கான இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


