News October 10, 2024
BREAKING: ரத்தன் டாடா காலமானார்

மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மருத்துவமனையில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஒய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
கோவை: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 10, 2025
சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.
News August 10, 2025
தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.